எதையோ தொலைத்து விட்டு தேடினேன் ,"பொத்" தென விழுந்தது கற்றை நிழற்படங்கள் !
பள்ளி கல்லூரி புகைப்படங்கள்.கருப்பு- வெள்ளை காலங்கள் கண் முன்னே நிழலாடியது .
தேடுவதை தொலைத்து விட்டு தொலைத்தவற்றை தேடலானேன்.
.
புனை பெயர் எல்லாம் சரியாய் நினைவிருக்க , நெஞ்சில் நின்ற ஒன்றிரண்டு நிஜப்பெயர்களை முகனூலிலும் , மாதா , பிதாவிற்கு அடுத்தும் தெய்வத்திற்கு முன்னும் வரும் கூகிளிலும் தேடினேன் .
பொக்கிஷம் போல் ஒரு பள்ளி தோழி சிக்கினாள் விரித்த வலையில்.
கூட்டணி சேர்ந்து ஓரடி கூட நகராமல் உலகின் மூலை முடுக்கிலெல்லாம் தேடினோம் கணிணியின் கருணையோடு.
ஒரு தொடர்பு இரண்டாக , இரண்டு நான்காக , நான்கு பலவாக நட்பு நெட்வொர்க் பெருகி வாட்ஸ் அப் குழுவாய் அவதாரம் பெற்றது.
அவரவர் கற்றதும்,பெற்றதும், வாழ்க்கை பட்டதும் என்று சுயசரிதம் பரிமாற பட்டது.
விடுவோமா ? வகுப்பில் அடித்த லூட்டியும் , வாங்கிய வசை சொற்களையும் அசை போட்டோம். வம்புகளில் மாட்டிக்கொண்டு அசடு வழிந்ததை விலாவாரியாய் விளக்கினோம் .
ஒரே பள்ளி ,அதே கட்டிடம் , பொதுவான ஆசிரியர்கள் ...ஆனால் அவரவர் அனுபவம் அலாதியாய் இருந்தது பேராச்சர்யம் .
நினைவுகளை அசை போட போட இட்லிக்கு அரைக்கும் உளுந்து போல் பெருகியது பேச்சு. ( இரண்டு பெற்று, இள நரை மறைக்க போராடும் பகுதி நேர எழுத்தாளியின் உவமை வேறு எப்படி இருக்கும் ?!)
முட்டி போட்ட நாட்களையும் , முழுவதுமாய் வெளியே சென்ற நாட்களையும் எண்ணி எண்ணி இன்று சிரித்தோம் .
அதோடு விட்டோமா ? மீண்டும் புனை பெயர் பரிமாற்றங்கள் . ஒரே வித்யாசம் இம்முறை ஆசிரியர்களின் புனைபெயர் !
ஆஹா ! பயமின்றி ஆசிரியரின் புனை பெயரை பகிருவது , பேரானந்தம் !
இப்படியாக நாளொரு profile picture , பொழுதொரு forward என ஆலமரமாய் தழைத்தது நட்பு வட்டம் android யின் உதவியுடன்.
வாழ்க whatsapp !

4 comments:
Eppidi Viji ivalo sirikka sirikka ezhudhare ??? Enakku onnoda blog podhum, pozhudhu poga :P
So true.
I love whatsapp for its ability to connect me to friends, and receive photos of my family. But I do hate the mandatory forwards.
Thank you Gayathri. Your words are very encouraging. Glad you liked it .
Thank you, Raji Muthukrishnan. Yes, mindless forwards are a major irritant.
Post a Comment