பொருள்
விளங்கா உருண்டை :
1 கடலை
; 4 பயறு ;
சிறிது வெல்லம்
; சிறுத்த சுக்கு .
தேங்காய் சில்லுகள்
.
பிடித்து
வைக்க கொஞ்சம் பலம்
கடிக்க
தேவை கடினமான பற்கள்
பாட்டி
சொன்ன பொருள்
விளங்கா உருண்டை....
அன்று
.
இன்று
,
தள்ளாடிய கால்கள்
.தளர்ந்த நெஞ்சம்
.
மங்கின பார்வை
.மழுங்கிய நினைவுகள் .
மனைவி –மக்கள்
, உயர் பதவி , அசையா சொத்துகள் .
சில வாடா
நட்புகள் , பல வேண்டா
வெறுப்புகள்
வெல்லமும் சுக்குமாய் வாழ்க்கை பாடங்கள்
கொண்ட பலத்துடன் பல்லைக்க
கடித்து
'தேங்கா'மல் உருண்டுவந்தேன்.
வந்தது செய்தி
, பேரன் பிறந்தான் என்று !
போனது அயற்சி..பொங்கியது மகிழ்ச்சி
கதை அதுவே . கதா பாத்திரம்
வேறு .
சந்ததிகள் பல
தழைக்கும்
