கருப்பு பிடிக்கும் என்றால் கருநீலம் பிடிக்காதா என்ன ?
பாகல் ருசிக்கும் என்றால் புடலை கசக்கும் என்றா சொன்னேன்?
மோக்ஷமு கலதா முதல் காதல் எனில் மொசார்ட்டின் கான்செர்டோ 25 இரண்டாம் பட்சம் ஆகிடுமா என்ன ?
மல்லிகை மயக்கும் என்றால் செண்பகத்தை சேர்க்க மாட்டேனா மாலையில் ?
பட்டின் ஸ்பரிசம் உகந்தது எனினும் பருத்தியின் மென்மைக்கு ஏங்க மாட்டேனா என்ன ?
இத்தனை ஏன் நீட்டி முழக்கி ?
ஐம்புலன்களை தாண்டி ஆறாவது ஒன்றும் உள்ளதே !
யோசிப்பீர்....

விருப்பு தவிர மற்றவை எல்லாம் வெறுக்க வேண்டியவை என்றால் அது அர்த்தம் அல்ல .அ பத்தம்.
என் அன்னை என் முழு அன்புக்கு பாத்திரம் என்றால் அது நேசம் . அதற்காக பிறர் அன்னையை வெறுத்தால் அது ஆவேசம்.
நாடு,மொழி,மதத்திலும் தாய் பாசத்தின் அர்த்தம்,நேசம் காண்போம். வெறுப்பின் அபத்தம் ,ஆவேசம் வேண்டாமே ..