முண்டாசு கவியின் முகத்தையும்
முக்கால் முகம் மறைக்கும் மீசையையும்
ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ,
ஐயோ,என் ஆயுளில் கொஞ்சம் குறைத்து,
காணி நிலமும் , முத்துசுடர் போல் நிலாவொளியும்
பத்து பனிரெண்டு தென்னைமரம்
கத்தும் குயிலோசை வீசும் தென்றல் -
மட்டுமே கேட்ட மாகவியை
இன்னும் கொஞ்சம் நாள் இங்கு உலவ
விட்டிருக்கலாமே பராசக்தி என்று கெஞ்ச தோன்றுகிறது.
கேட்டது காணி நிலம்
கொடுத்ததோ கொள்ளாது இப்புலம் !
கேட்டது காணி நிலம்
கொடுத்ததோ கொள்ளாது இப்புலம் !
Picture credits: P . Manivannan
http://www.thehindu.com/features/magazine/fantasy-in-verse/article5096145.ece

No comments:
Post a Comment