9.நவ தான்ய சுண்டல் இருக்கட்டும் அதை
நவ நாகரீக பிளாஸ்டிக்கில் அடைக்க வேண்டாமே
8.சருகிலையிலான தொண்ணை இருக்க
சாகா வரம் பெற்ற ஸ்டைரோபோம் வேண்டாமே
7.மஞ்சள் குங்குமம் மடிப்பதற்கு காகிதம் போதுமே
அலுமினிய பாக்கெட்டில் கொடுப்பது வேண்டாமே
6.மாவிலை தோரணம் மறந்தே போனதே ஐயோ ,
மாறாக வந்த தெர்மோகோல் தோரணம் வேண்டாமே
5.அரிசிமாவு கோலமும் அடுக்களையில் கிடைக்கும் வர்ணமும் போதுமே
அமிலம் கலந்த மாவும் வர்ண பொடியும் வேண்டாமே
4.கொத்து மஞ்சளும் கொட்டை பாக்கும் , "தேங்காய்" என கொடுக்கலாமே
மறுபரிசும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் எனில் வேண்டாமே
3.பொரி கடலைக்கு காகித பொட்டலம் போதுமே
மறுபடியும் பிளாஸ்டிக் வேண்டாமே
2.தாம்பூலம் தாங்க துணிப்பையை தூக்கி செல்லலாமே
அதற்கும் அழிவில்லா பிளாஸ்டிக் பை வேண்டாமே
1.களிமண் பொம்மையும் விஷமில்லா வர்ண பூச்சும் வரவேற்று
மாசு படுத்தும் எந்த ஆடம்பரமும் வேண்டாமே !
வேண்டாமே இது போன்ற நவராத்திரி ...

