Saturday, February 27, 2016

ஆலமரம்

                                          ஆலமரம் 


நேர் கோடாய் போட்ட தார் ரோடு 
சீர் கெடாது ஓடிய மாட்டு வண்டி 
பார் என்னை என்ற அபூர்வ பரி வண்டி 
போர் முனைக்கு செல்லும் வேகத்துடன்  பல சக்கர வாகனங்கள்




ஊர்  சேரும் வரை உயிர் பிழைக்கும் டயர் என்ற நிம்மதி சின்னையனுக்கு 
தேர் திருவிழாவில் வாங்கிய செருப்பும் தப்பிக்கும் என்றாள் சிவப்பி 
இப்படியாக தார் ரோட்டின் தன்மையிலே எல்லோரும் திளைக்க 
ஆல மரத்தில் மட்டும் ஆரவாரம் ..



ஆயிரம் ஆண்டாம் .விழுதுகள் மாநாடாம் . 
மூத்த விழுதொன்று முனைந்த முகவுரை இதோ :

"சிறு விதையினின்று முளைத்தோம் .
 செடியாய் , பெருமரமாய், தழைத்தோம் .
பழம்தின்னிப்  பறவைக்கு இருப்பிடமாகி 
பாதசாரிக்கு குடையாகி ....."



கை தட்டல் வேண்டி கணநேரம் நிறுத்திய மூத்த விழுது ,
இளம்  விழுதுகளின் முணுமுணுப்பில் முற்றும் மௌனியானது .

கேளுங்கள் அவற்றின் கூற்றை :

"தேசிய மரம் என்றீரே ? 
 மண் தொட ஓரடி தான் மிச்சம் .
விழுதூன்ற வேண்டிய  விளை நிலத்தின் மீது  தேசிய நெடுஞ்சாலையாம் . 
யாரிதற்கு  "தார்" மீக பொறுப்பு? "



ஊஞ்சலாடியது   இளம் விழுதுகள் மட்டும் அல்ல .
அவற்றின் கேள்விகளும்  தான் .




1 comment:

Unknown said...

Well written Viji ! Unfortunately we are also in the same position as the " ilam Vizhudhugal " :(

Akshaya tritiya - Caveat Emptor!

 Akha Teej or Akshaya tritiya is an auspicious day for the Hindus and Jains. 'Kshaya' in Samaskritam means to erode/diminish. 'A...