ஆலமரம்
நேர் கோடாய் போட்ட தார் ரோடு
சீர் கெடாது ஓடிய மாட்டு வண்டி
பார் என்னை என்ற அபூர்வ பரி வண்டி
ஊர் சேரும் வரை உயிர் பிழைக்கும் டயர் என்ற நிம்மதி சின்னையனுக்கு
தேர் திருவிழாவில் வாங்கிய செருப்பும் தப்பிக்கும் என்றாள் சிவப்பி
இப்படியாக தார் ரோட்டின் தன்மையிலே எல்லோரும் திளைக்க
ஆயிரம் ஆண்டாம் .விழுதுகள் மாநாடாம் .
மூத்த விழுதொன்று முனைந்த முகவுரை இதோ :
"சிறு விதையினின்று முளைத்தோம் .
செடியாய் , பெருமரமாய், தழைத்தோம் .
பழம்தின்னிப் பறவைக்கு இருப்பிடமாகி
கை தட்டல் வேண்டி கணநேரம் நிறுத்திய மூத்த விழுது ,
இளம் விழுதுகளின் முணுமுணுப்பில் முற்றும் மௌனியானது .
கேளுங்கள் அவற்றின் கூற்றை :
"தேசிய மரம் என்றீரே ?
மண் தொட ஓரடி தான் மிச்சம் .
விழுதூன்ற வேண்டிய விளை நிலத்தின் மீது தேசிய நெடுஞ்சாலையாம் .
யாரிதற்கு "தார்" மீக பொறுப்பு? "








1 comment:
Well written Viji ! Unfortunately we are also in the same position as the " ilam Vizhudhugal " :(
Post a Comment