Sunday, July 6, 2014

பொருள் விளங்கா உருண்டை

பொருள் விளங்கா உருண்டை :

1 கடலை ; 4 பயறு ;
சிறிது  வெல்லம் ; சிறுத்த சுக்கு .
தேங்காய்  சில்லுகள் .
பிடித்து வைக்க கொஞ்சம் பலம்
கடிக்க தேவை கடினமான பற்கள்
பாட்டி சொன்ன  பொருள் விளங்கா உருண்டை....
அன்று .

இன்று ,

தள்ளாடிய  கால்கள் .தளர்ந்த  நெஞ்சம் .
 மங்கின  பார்வை .மழுங்கிய நினைவுகள் .
மனைவி  –மக்கள் , உயர் பதவி , அசையா  சொத்துகள்  .
சில  வாடா நட்புகள்பல  வேண்டா வெறுப்புகள்
வெல்லமும்   சுக்குமாய்   வாழ்க்கை  பாடங்கள் 
கொண்ட  பலத்துடன்  பல்லைக்க கடித்து
'தேங்கா'மல்   உருண்டுவந்தேன்.
வந்தது  செய்தி , பேரன்  பிறந்தான்  என்று  !
போனது  அயற்சி..பொங்கியது  மகிழ்ச்சி
கதை  அதுவே  . கதா  பாத்திரம் வேறு  .
சந்ததிகள்   பல தழைக்கும் 
இப்புவியும்  ஒரு  பொருள்  விளங்கா  உருண்டையே  !










4 comments:

Anonymous said...

great - you should start trying some traditional poems too - :-)
விஜி.தம் பொருளுள் விளங்கும் உருண்டை
புஜியென்றுப் போட்டார் புனைந்து ~ விஜயமே
சொற்சுவையில் சொத்தைப்பல் தோன்றும் சிரிப்பொலியில்
பற்சுவையில் பாட்டியின் பாட்டு.

RAJI MUTHUKRISHNAN said...

Very nice. You write so well in Tamil as well.

Ripple-waves said...

THankyou RAji muthukrishnan for visiting my page and the nice words ! By mistake your initial comment got deleted . OOPS !

Ripple-waves said...

Thankyou , Anonymous . Loved the Tamizh comment .

Akshaya tritiya - Caveat Emptor!

 Akha Teej or Akshaya tritiya is an auspicious day for the Hindus and Jains. 'Kshaya' in Samaskritam means to erode/diminish. 'A...