அம்மா.......
பிறக்கும் போது அழுதேன்
பக்கம் இருந்து பாலூட்டி கண் துடைத்தாய்
நடக்கும் போது விழுந்தேன்
பக்கம் வந்து கை கொடுத்து மண் துடைத்தாய்
வளரும் போது கொதித்தேன்
பக்கம் வந்து தோள் கொடுத்து துயர் துடைத்தாய்
இறக்கும் போது நான் அழுதேன்... நீ ..... இறக்கும் போது நான் அழுதேன் .....
வடபக்கம் இருந்து கண் அயர்ந்தாய்
சட்டென்று எல்லாம் புரிந்தது .
அங்கும் எனக்கு கண் துடைத்து ,கை கொடுத்து , தோள் கொடுக்க
முன் சென்றாயோ ?
( I penned this the day my best friend lost her mom )

No comments:
Post a Comment